காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்து நாசவேலைக்குத் திட்டமிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தங்குமிடம் மற்றும் தளவாடங்களைப் பெற்றுத் தருதல், மேலும் காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களில் இணைத்தல் போன்ற வேளைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.