சாம்ராஜ்நகர்: ”அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல. அது போல ஹிந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர். ”வரலாற்றில் நடந்த சம்பவம், இனி நடக்கக்கூடாது என்ற நோக்கில், இத்திரைப்படம் வெளியானது,” என கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: காஷ்மீருக்கு நான் பலமுறை சென்றுள்ளேன். எப்படி உள்ளது என்பது எனக்கு தெரியும். இதற்கு முன் நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கில், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பது, இதன் குறிக்கோள்.அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல. அதுபோல அனைத்து ஹிந்துக்களும் நல்லவர்கள் அல்ல. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை, முஸ்லிம்களும் பார்க்கின்றனர்.
பள்ளி பாடங்களில் பகவத் கீதையை சேர்க்க, அரசு ஆலோசிப்பது குறித்து, எனக்கு தெரியாது. பகவத் கீதையை பாடங்களில் சேர்ப்பதன் சாதக, பாதகங்களை அலசி, ஆராய்ந்து கமிட்டி முடிவு செய்யும். நாட்டின் வரலாற்றை, அடுத்த சந்ததியினருக்கு, கொண்டு செல்ல தேவையான நடவடிக்கையை கமிட்டி எடுக்கும். சிலருக்கு மட்டுமே, அரசியலில் கிடைக்கும் வாய்ப்புகள், சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற, பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனை ஏற்புடையதே. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement