இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது.
சிறுமி படிக்கும் பள்ளியில் ‘நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்’ (good touch & bad touch) அமர்வின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
ஒரு மைனர் சிறுமியை அவளது டீனேஜ் சகோதரர் மற்றும் அவர்களது தந்தை தனித்தனி சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் சிறுமியின் தாத்தா மற்றும் தூரத்து சொந்தமான மாமாவும் அவரை துன்புறுத்தியுள்ளனர். இந்த குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடந்ததாக புனே காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ் பலாத்காரம் மற்றும் கற்பழிப்புக்காக பூனே பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர், ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது 11 வயதாகும் சிறுமியின் சகோதரர் மற்றும் 45 வயதான தந்தை மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புனேவில் உள்ள காவல் நிலையத்தில் அவரது தாத்தா (வயது சுமார் 60) மற்றும் மாமா (சுமார் 25 வயது) ஆகியோர் மீது பிரிவு 354 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது புனேவில் வசித்து வருகின்றனர்.
representational image. Pixabay
2017-ஆம் ஆண்டு பீகாரில் வசிக்கும் போது தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார் என்று புகாரை மேற்கோள் காட்டி காவல் ஆய்வாளர் கூறினார்.
“பெண்ணின் மூத்த சகோதரர் நவம்பர் 2020 இல் அவளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். அவளது தாத்தாவும் தூரத்து சொந்தமான மாமாவும் அவளை தகாத முறையில் தொடுவது வழக்கம்” என்று காவல் ஆய்வாளர் கூறினார்.
ஹோலி கொண்டாட்டத்தில் துயரம்: போதையில் தன்னைத் தானே குத்திக்கொண்ட இளைஞர்… வைரல் வீடியோ
அனைத்து சம்பவங்களும் தனித்தனியாக நடந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் செயல்களை அறிந்திருக்க மாட்டார்கள், இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என்று காவல் ஆய்வாளர் சத்புட் கூறினார்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ (POCSO Act) சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.