ஆர் ஜே பாலாஜி
பதிவிட்டுள்ள ட்விட், வலிமை படத்தை கலாய்ப்பது போல் உள்ளது. இது,
அஜித்
ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆர் ஜே பாலாஜி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கி, நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறன் கொண்டுதிகழ்கிறார்.
இவர் ஆரம்பத்தில், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து, இவரே கதாநாயகனாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
என் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எதையும் நான் மறைத்ததில்லை. காதலைப் பற்றி வாய் திறந்த மஞ்சிமா…!
இந்நிலையில், பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில்,
போனி கபூர்
தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’. ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படமான, ”
வீட்ல விசேஷம்
” படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீட்டுல விசேஷங்க படத்தில் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்
சத்யராஜ்
மற்றும்
ஊர்வசி
நடித்து உள்ளனர். ”வீட்ல விசேஷம்” என்ற பெயரில் ஏற்கனவே, பாக்கியராஜின் படம் வெளியாகி இருந்தது. தற்போது அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு இப்படத்தில் அந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரையும், ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.கல்யாணமான புது தம்பதிகளிடம் குழந்தை உண்டானதா என்பதை பலரும் வீட்டில் ஏதும் விசேஷம் உண்டா என்று கேட்பார்கள். தற்போது இப்படத்தின் போஸ்டரில் ஊர்வசிக்கு வளகாப்பு நடைபெறுவது போல பின்னால் சத்யராஜ், ஆர் ஜே பாலாஜி இருவரும் உள்ளனர்.
அதன்படி, ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ திரைப்படத்தின் போஸ்டரை பார்த்து, ஒருவர் ‘சர்சைக்குரிய கதை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாலாஜி, ஆமா..!!! குடும்பத்தில்ஒருவர் கர்ப்பமாக இருந்தா அது சர்சைக்குரிய கதை, ஆனால், ஹீரோ ரவுடி, டான், கொலைகாரன், திருடனா நடிச்சா குடும்ப படம் என்று கலாய்த்துள்ளார். இது, வலிமை படத்தை கலாய்ப்பது போல்உள்ளதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!