தமிழ்நாட்டில் உள்ள குருவிக்காரர் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரிப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,அந்த சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்துக்கு இந்தியத் தலைமைப் பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லோகூர் குழுவும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் இந்தச் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகப் பல கோரிக்கைகள் அளித்திருந்தும் இந்தச் சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நெடுங்காலமாக நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.