புதுச்சேரி : தேசிய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மகளிர் மனநலம் என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய பயிற்சிப் பட்டறை நடந்தது. கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத் சிங் துவக்கி வைத்தார்.
இந்திய கையுந்து பந்து வீராங்கனை நர்மதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பயிற்சி முகாமில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பெண்கள் எதிர்நோக்கும் உளவியல், உடல் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் முன்னேற்றத் துறை இயக்குனர் ஷிப்நாத் தேப், பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குனர் வசந்தி கலந்து கொண்டனர்.பயிற்சி பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, சமுதாய கல்லுாரி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி : தேசிய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற கல்லுாரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில் மகளிர் மனநலம் என்ற தலைப்பில் மூன்று
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.