சர்ப்ரைஸாக தோன்றி மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை பாவனா! எழுந்து நின்று கரகோஷமிட்ட பிரபலங்கள்

கேரளாவில் துவங்கியுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு, யாரும் எதிர்பாராத வகையில், 5 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு விருந்தினராக வந்து மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகை பாவனாவுக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் எழுந்து நின்று கரகோஷம் அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த 2017-ல் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குப் பிறகு, நடிகை பாவனா சுமார் 5 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் நடிக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், பாவனா ‘Ntikkakkakkoru Premondarnn’ என்கிற மலையாளப் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

image

இதையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன. மலையாளத்தில், கடந்த 2017-ல் வெளிவந்த ‘ஆதம் ஜான்’ என்கிற படத்தில் தான் பாவனா கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில், கேரளாவில் துவங்கியுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு, யாரும் எதிர்பாராத வகையில், 5 வருடங்களுக்குப் பிறக சிறப்பு விருந்தினராக வந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை பாவனா.

கடந்த மார்ச் 18-ம் தேதி கேரளாவில் IFFK (International Film Festival Kerala) எனும் 26-வது கேரளா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இதில், பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி நிரலில் பாவனாவின் பெயரே இல்லாத நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக உள்ளே நுழைய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

image

பாவனா வந்தபோது ரசிகர்கள் இடைவிடாமல் கரவொலியை எழுப்பி பாவனாவை வரவேற்பு செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நடிகை பாவனா தொடங்கி வைத்த நிலையில், கேரளாவின் கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன் பாவானாவை பாராட்டி பேசியிருந்தார். “கேரளாவின் ரோல் மாடல் நீங்கள்” என அவர் பாராட்டியதற்கு பாவனா நன்றி தெரிவித்தார்.

மேலும், பாவனா விழா நிகழ்வில் கலந்து கொண்ட காணொலியைப் பகிர்ந்து நடிகை பார்வதி மேனன், “வெல்கம் பேக் பாவனா. இது உங்களுக்குக்கான இடம். உங்கள் கதை. உங்களுடையது!” எனப் பதிவிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாவானா பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பான வீடியோக்களும் படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.