சர்வதேச பயணியருக்கு கட்டுப்பாடு முழுதும் ரத்து செய்தது பிரிட்டன்| Dinamalar

லண்டன்:சர்வதேச பயணியருக்கான கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுதும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 2020 முதல் சர்வதேச விமான பயணியர் சேவையை ரத்து செய்த ஐரோப்பிய நாடான பிரிட்டன், பின் குறிப்பிட்ட நாடுகள் இடையே சேவையை துவங்கியது. இவ்விமானங்களில் பயணிக்க கட்டாய தடுப்பூசி, புறப்பாட்டுக்கு முன் பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.

இந்நிலையில், சர்வதேச பயணியருக்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் முழுமையாக தளர்த்தி உள்ளது. இதன்படி, தடுப்பூசி செலுத்தாத பயணிருக்கு புறப்படும் முன் கட்டாய பரிசோதனை, எங்கு தங்க உள்ளோம் என்பதை தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, பிரிட்டன் விமான போக்குவரத்து அமைச்சர் ராபர்ட் கோர்ட்ஸ் கூறும்போது ”இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு பரிசோதனை மற்றும் தடுப்பூசியிலும் தீவிர கவனம் செலுத்தினோம். இதனால் தற்போது எவ்வித கட்டுப்பாடும் இன்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது,” என்றார்.’எதிர்காலத்தில், கொரோனா உருமாற்றம் ஏதும் இருந்தால், அதற்கேற்ப கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.