பீஜிங்-சீனாவில் ஓராண்டுக்குப் பின், இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் மாகாணத்தில், 2019ல் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
பின் இது உலகம் முழுதும் பரவி பரிதவிக்க வைத்தது. கொரோனா பரவலுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்ட பின் தான், பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் ஜிலன் மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் துவங்கியுள்ளது. இதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வரை அங்கு 2,157 பேர் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்து உள்ளனர். ஓராண்டுக்குப் பின் நேற்று தான் அங்கு இருவர் பலியாகி உள்ளனர். சீனாவில் கடந்த 2019ல் இருந்து, இதுவரை 4,636 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
பீஜிங்-சீனாவில் ஓராண்டுக்குப் பின், இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் மாகாணத்தில், 2019ல் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டது. nsimg2987186nsimg பின் இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.