சென்னை: ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டார். அடுக்குமாடு குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டி வீடு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.