சென்னையில் நடக்க உள்ள உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த இலச்சினை, மஸ்காட் எனப்படும் சின்னம், வாசகம் ஆகியவற்றை உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இப்போட்டிகளில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்த செஸ் தொடர் குறித்த போட்டி ஒன்றை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இலச்சினை போன்றவற்றுக்கான வடிவமைப்புகளை வரும் 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.