டிஜிட்டல் பேமெண்ட், டிஜிட்டல் விவசாய பொருட்கள் கொள்முதல்.. நவீனமயமாகும் விவசாய துறை..!

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பொதுப் பட்ஜெட் அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் துறைக்கான சிறப்புத் தனிப் பட்ஜெட் அறிக்கையை 2வது முறையாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விவசாயத் துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபடுத்த பல்வேறு ஊக்க திட்டங்கள், பயிற்சி திட்டங்கள், நிதியுதவி திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதோடு டிஜிட்டல் பேமெண்ட் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வருமான இழப்பு

தமிழ்நாடு பல வகையில், பல துறையில் தனது வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் இதனால் அரசு அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது எனத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே கூறினார்.

 பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

இதைச் சரி செய்ய அனைத்து அரசு மற்றும் அரசு சேவை அளிக்கப்படும் துறையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை இல்லாததும் வரி இழப்பிற்கு முக்கியக் காரணமாக உள்ளது எனப் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

 டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம்
 

டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம்

இந்த நிலையை மாற்ற விவசாயத் துறையில் முதல் முறையாக 2022-23ஆம் நிதியாண்டு முதல் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அதாவது டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வேளாண் அமைச்சர் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.

 கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு

டிஜிட்டல் பேமெண்ட் சேவை மூலம் மக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஸ்கேன் பேமெண்ட் சேவைகள் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் இந்தியா முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறைகள் தமிழ்நாடு விவசாயத் துறை முதல் அடியை எடுத்துவைத்துள்ளது. இதன் மூலம் அடுத்தது பிற அனைத்து பிரிவுகளும் இந்த டிஜிட்டல் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படலாம்.

 டிஜிட்டல் விவசாயம் திட்டம்

டிஜிட்டல் விவசாயம் திட்டம்

இதோடு விவசாயிகள் விதை முதல் விளை பொருட்களை வரையில் அனைத்தையும் இணையத்தின் வாங்க ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் திட்டத்தை 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிமுகம் செய்தார் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்.

 மொத்த பட்ஜெட்

மொத்த பட்ஜெட்

2022-23 நிதியாண்டில் வேளாண் பட்ஜெட்டுக்கு சுமார் ரூ. 33007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த வேளாண் பட்ஜெட்டை விட இந்த ஆண்டு 251 கோடி ரூபாய்க் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Digitization in farm sector: Promising Tamil Nadu Agriculture Budget 2022

Digitization in farm sector: Promising Tamil Nadu Agriculture Budget 2022 டிஜிட்டல் பேமெண்ட், டிஜிட்டல் விவசாயப் பொருட்கள் கொள்முதல்.. நவீனமயமாகும் விவசாயத் துறை..!

Story first published: Saturday, March 19, 2022, 11:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.