தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இதனையொட்டி அவர்களுக்கு நாளை (மார்ச் 19ம் தேதி) மாற்று விடுமுறை வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.