சென்னை: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23 நிதியாண்டில், ரூ.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், Agri Clinic அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பின் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான வேளாண் பட்ஜெட் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சரியாக காலை 10 மணியளவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் சார்ந்த அறிவிப்புகளையும், நீதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்ட அவர், > ரூ.1 லட்சம் நிதியுதவி: இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் என்ற திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்புகளைப் படித்த 200 இளைஞர்களுக்கு 2022-23 நிதியாண்டில், ரூ.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், Agri Clinic அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
> ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், விவசாயம், விவசாயம் சாந்த தொழிலலை லாபகரமாக மாற்ற 2500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்தாண்டைப் போலவே, 2022-23 ஆண்டிலும் வழங்கப்படும்.
> வேளாண்மையை சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசு: இயற்கை வேளாண்மை, விளை பொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்தும், பரிசுகள் அளித்தும், பாராட்டியும் வருகிறது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.