தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சிக்கு வித்திடும் கொள்கை அறிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, ஒரு சமூகநீதி கொள்கை அறிக்கை என்றும், வெறும் வரவு – செலவு கணக்காக இல்லாமல், அரசின் கொள்கை, கோட்பாட்டை தெளிவுபடுத்தும் செயல்திட்ட அறிக்கையாகவும் அமைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை முற்போக்கான, முன்னேற்றமான திசைவழியில் இட்டுச்செல்லும் வகையிலும் தொலைநோக்கோடு நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் பாராட்டியுள்ளார். இதை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோரையும் அவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி,கூட்டுறவு, பாசனம், சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பல அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டார். இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM