டொலர் பிரச்சினை காரணமாக கொழும்பு துறை முகத்தில் சிகியிருக்கும் அத்தியாவசிய கொருட்களை உள்ளடக்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், வர்த்தகப் பொருட்களை துரிதமாக விடுவித்து அவற்றை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குமாறு வர்த்தகர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவுடன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவை பின்னர் செலுத்தும் முறைக்கு அமைவாக கடன் பெறப்பட்டுள்ளது. அதாவது Line of Credit ஜ பெற்றுக்கொண்டுள்ளோம். இதற்கமைவாக துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களைக்கொண்ட கொள்கலன்களை விடுவிக்குமாறு வர்தக அமைச்சின் செயலாளருக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலினால் உலகளாவிய விநியோக வலையமைப்பு சீர்குலைந்துள்ளமையினால் பல்வேறு கட்டணங்களும் அதிகரித்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான கனரக வாகனக் கட்டணங்கள், கப்பல் கட்டணங்கள் என்பனவும் அதிகரித்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் உற்பத்திச் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்ய முடியும் என்றும் இந்த நிலை தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் சீரடையும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, அத்தியாவசிய உணவுப் பொருள், மருந்துகள், சீமெந்து, துணி வகைகள், விலங்குணவுகள், விசேட உர வகைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்ககளுக்கான இறக்குமதியாளர்கள் இதன் போது பதிவு செய்து கொள்ள முடியும்.
இவ்வாறான பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள் www.trade.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களை 0762 566 047 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.