பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மானுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து கடந்த 16-ம் தேதி அன்று பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பிறகு வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதைத்தவிர, மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலையை மேம்படுத்துவதாகவும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது.
இதேபோல், மாநிலத்தில் ஊழலற்ற ஆட்சி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பகவந்த் மான் தலைமையில் இளைஞர்களிடையே வேலை வாய்ப்பு குறித்த பெரிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.. கே-ரெயில் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு- போராட்டக்காரர்களுடன் மத்திய மந்திரி முரளிதரன் சந்திப்பு