முடி உதிர்தல் என்பது இந்த நாட்களில் நம்மில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினையாகும். முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், உச்சந்தலையை மென்மையாக்குவதற்கும் ஒருவரின் தலைமுடிக்கு எண்ணெய் தடவுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள்’ முடியில் உள்ள இழந்த லிப்பிட்களை மாற்றுகிறது, இது முனைகளை பிளவுபடுத்துவதற்கான முக்கிய காரணியாகும். எண்ணெய் கியூட்டிக்கிள்-ஐ அடைத்து முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
தேங்காய் எண்ணெய் முதல் செம்பருத்தி மற்றும் விளக்கெண்ணெய் வரை, ஒருவர் பயன்படுத்தக்கூடிய பல்வேறு முடி எண்ணெய்கள் உள்ளன. ஆனால் பலவிதமான எண்ணெய்களை வாங்குவதற்குப் பதிலாக, சுத்தமான தேங்காய் எண்ணெயில் சில ஆரோக்கியமான பொருட்களைக் கலந்து, அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகரின் தாய் ரேகா, சில அடிப்படைப் பொருட்களைக் கொண்டு மூலிகை எண்ணெயை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்பதைக் காட்டினார்.
தேவையான பொருட்கள்
20 – செம்பருத்தி மலர்கள்
30 – வேப்ப இலைகள்
30 – கறிவேப்பிலை
5 – வெங்காயம் (சிறியது)
1 தேக்கரண்டி – வெந்தய விதைகள்
1 – கற்றாழை இலை
15-20 – மல்லிகை பூக்கள்
1 லிட்டர் – தேங்காய் எண்ணெய்
செயல்முறை
* வெந்தயத்தை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* கற்றாழையை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைக்கவும்.
* இந்த கலவையை சுத்தமான தேங்காய் எண்ணெயில் சேர்க்கவும்.
* பச்சை நிறம் மாறும் வரை 45 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடாக்கவும்.
* ஆறவிடவும்
* வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
ஒவ்வொரு பொருளின் நன்மைகளையும் ரேகா விளக்கினார். “செம்பருத்தி, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் முடி வளர்ச்சிக்கு (தடிமனாகவும், நீளமாகவும்) பெரிதும் உதவுகின்றன. வேப்ப இலைகள் பொடுகு மற்றும் பேன் வராமல் தடுக்கிறது. கற்றாழை பளபளப்பைத் தருவதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வெந்தயம் பொதுவாக ஆரோக்கியமான கூந்தலுக்கான நன்மைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். மல்லிகைப் பூக்கள் எண்ணெய்க்கு நறுமணத்தைத் தருகின்றன. வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெயைப் பயன்படுத்த அவர் பரிந்துரைத்தார்.
“ “