பஞ்சாபில் பத்து அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.
இன்று காலை 11 மணிக்கு சண்டிகரில் பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் முதலமைச்சர் பகவந்த் மான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டிவிட்டர் பதிவில், பஞ்சாப் மக்கள் தங்கள் மீது நம்பிக்கையை வைத்து மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் பகவந்த் மான், அதற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து நேர்மையான அரசை வழங்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபை வண்ணமயமாக்கிக் காட்டுவோம் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.