பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பைச் சந்தித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 2016ம் ஆண்டு துபாய் சென்ற பர்வேஸ் முஷரப் அதன் பின்னர் பாகிஸ்தான் திரும்பவில்லை. முஷரப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதே அதற்கு காரணமாகும்.
இந்த நிலையில் சக்கர நாற்காலில் முஷரப் அமர்ந்திருக்கும் நிலையில் அவர் அருகே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நிற்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இருவரும் எப்படி, எப்போது சந்தித்தார்கள் என்ற தகவல் வெளியாகாத நிலையில், துபாயில் தற்செயலாக சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.