புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவது குறித்து புகாரளித்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய விவகாரத்தில் விராலிமலை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விராலிமலை காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.