தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன்.
சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை கட்டிப்போட்ட வாணி, இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.
ஒருமுறை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, சின்னத்திரை நடிகையாக இருந்து, திரைப்படங்களில் நடிக்கும் அனுபவம் குறித்து வாணி போஜன் பேசினார். என்னன்னு கீழே பாருங்க!
என்னைப் பொறுத்தவரை, தொலைக்காட்சி பெரியது. நடிகையாக நான் பெயர் பெற்ற இடம் அது. ஆனால், திரைப்படங்கள் வித்தியாசமான அனுபவம்.
குறுகிய காலத்தில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கலாம், டிவி சீரியல்களில் அப்படி இல்லை, ஒரு கதாபாத்திரம் ஐந்து வருடங்களுக்கு தொடரும்.
நீங்கள் அறிமுகமானதில் இருந்து முதிர்ந்த பாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வாணி; ஹீரோவை சுற்றியே அதிக நேரத்தை செலவிடும் அந்த வழக்கமான ஹீரோயின் கேரக்டரில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு நடிகையாக எனக்கு சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
வாணி போஜன், சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
அதில் அடிக்கடி தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்கிறார். ஓய்வு நேரத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்.
வாணி போஜன் கடைசியாக அர்சில் மூர்த்தி இயக்கிய ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.
இப்போது பரத் நடிக்கும் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.
“ “