பேரழிவை ஏற்படுத்தும் உயிர்க்கொல்லி ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் யுத்தத்தில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் சூழல் குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் இசுமி நகாமிட்சு கூறிய கருத்துகளை ஒட்டி பேசிய இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி ரவீந்திரன், பேரழிவை ஏற்படுத்தும் அனைத்து வகை ஆயுதங்களையும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரஷ்யா உக்ரைன் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையை வரவேற்பதாகக் கூறியுள்ள இந்தியப் பிரதிநிதி பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்