கேரளாவில் மகனின் குடும்பத்தையே வீட்டோடு வைத்து கொளுத்திய கொடூரத் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ஹமீது என்பவர் மனைவி இறந்த பின்னர், மகன் முகமது பைசலுடன் தங்கியிருந்தார். அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அனைத்து கதவுகளையும் வெளிப்புறத்தில் பூட்டிவிட்டு, பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் சென்று தீயை அணைப்பதற்குள் வீட்டிற்குள் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மகன் மற்றும் அவரது குடும்பத்தை தீ வைத்து கொளுத்தி கொலைசெய்த ஹமீதை கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM