மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்த நிலையில், வரவேற்பு நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் – ஆக பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு, கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி இருவருக்கும் இங்கிலாந்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.
கொரோனா காரணமாக தாமதமாக தமிழகம் திரும்பிய இந்த ஜோடிக்கு உசிலம்பட்டி ஏஜி தேவாலயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்துச் சூழலும் உணவும் மனிதர்களின் அன்பும் பிடித்துப் போனதாக சாரா எலிசபெத் தெரிவித்தார்.