தமிழ் சினிமாவின் ஒரே கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த், உடல் நலக்குறைவால், சில வருடங்களாக சினிமா, அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார்.
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை அருகே பிறந்த விஜயகாந்த், 70களின் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடிகராக நுழைந்தார். தொடர்ந்து 80 களின் நடுப்பகுதியில், ஒரு அதிரடி ஹீரோவாக விஜயகாந்த் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
1990-ல் பிரேமலதாவை மணந்த அவருக்கு, விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தேமுதிகவின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது விஜயகாந்த் முதன்முதலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால், சென்னை, உட்பட சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
சமீபத்தில் விஜயகாந்த் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகியது அதில் விஜயகாந்த் டீசர்ட், பேண்ட் உடன், உடல்மெலிந்த தோற்றத்தில்’ நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள்’ கேப்டனுக்கு என்ன ஆச்சு என’ அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இன்று பிரேமலதாவுக்கு பிறந்தநாள். இதனை முன்னிட்டு, விஜயகாந்த் மனைவி மற்றும் இரு மகன்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
அந்த புகைப்படங்களை தனது ட்வீட்டரில் பக்கத்தில் பகிர்ந்த விஜயகாந்த், இன்று எனது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது… என பதிவிட்டுள்ளார்.
இன்று எனது மனைவி
திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன், தெரிவித்த போது…#PremalathaVijayakant | @vj_1312 | #Shanmugapandian pic.twitter.com/yfX1cU0w6x— Vijayakant (@iVijayakant) March 18, 2022
“ “