கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, வரும் 22 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள சுாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில்
முழு ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதே போல், ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து,
ஆஸ்திரியா
உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.
இந்நிலையில், தீவு நாடான சமோவாவில், அண்மையில் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தப் பெண்மணி, மருத்துவமனைகள், நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மார்ச் 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுத்த திடீர் முடிவு?
இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என
சமோவா
பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா அறிவித்துள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பொது இடங்களில் பொது மக்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், முழு ஊரடங்கு நடவடிக்கை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சமோவா தீவில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.