ஊனையூரில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று பசுமாடு, ஒரு காளைமாடு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அதில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் சின்னக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் மல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், கென்னடி மற்றும் வடிவேலு ஆகியோருக்குச்; சொந்தமான நான்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு மாடுகளும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதையடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த தங்களது மாடுகளை பார்த்த உரிமையாளர்கள் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் வட்டாட்சியர் பிரவினா மேரி, வருவாய்த் துறையினர், மற்றும் மின்சார வாரிய பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்ய ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். உடனடியாக மின் கம்பிகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM