யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் தங்குமிடக் கட்டிடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த தங்குமிடக் கட்டிடம் கட்டப்பட்டது.
பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர், அப்பகுதியில் உள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 போசாக்கு உணவு பொதிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாவற்குளி வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகள் 36 பேருக்கு பிரதமரினால் வீட்டு உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டன.
உடரட அமரபுர மஹாநிகாயவின் அதிகரன சங்கநாயக்கர், நந்தாராம பௌத்த மத்தியஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய உடுவெல சுமேத நாயக்க தேரர், உடரட அமரபுர மஹாநிகாயவின் வடமாகாண பிரதான சங்கநாயக்கர், நாவற்குளி சமித்தி சுமண விகாராதிபதி ஹங்வெல்லே ரதனசிறி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது கௌரவ பிரதமருக்கு ஆசீர்வாத பிரித் பாராயணம் நிகழ்த்தினர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு