ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, இந்தியத் தலைவர்களுடன் தாங்கள் பல்வேறு மட்டங்களில் தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு வரலாற்றின் தவறான பக்கத்தில் வைக்கும் என்று அவர் தெரிவித்தார். உக்ரைனை ரஷ்யா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்ட சாகி, இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதா என உலகம் உற்று நோக்குவதாகவும் தெரிவித்தார்.