சர்வதேச அளவில் புகழ்பெற்ற உக்ரேனிய நடனக் கலைஞர் ஒருவர் ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனிய நடனக் கலைஞரான 43 வயது Artyom Datsishin என்பவரே, ரஷ்ய குண்டுவீச்சில் படுகாயமடைந்து, 3 வார சிகிச்சைக்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.
Artyom Datsishin சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் எனபதுடன், ரஷ்யாவின் Bolshoi அரங்கத்தில் குறிப்பிடத்தக்க கலைஞர்களில் இவரும் ஒருவர்.
உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைநகர் கீவில் Artyom Datsishin காயமடைந்தார்.
தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த Artyom Datsishin, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிகழ்ச்சிகள் பல முன்னெடுத்துள்ள Artyom Datsishin மறைவு அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய துருப்புகளின் தாக்குதலில் அவர் சிக்கியுள்ள தகவல் வெளியான நிலையில், ரஷ்யாவின் பிரபல நடன இயக்குனர் அலெக்ஸி ரட்மான்ஸ்கி கடும் கோபத்துடன் விமர்சனம் முன்வைத்திருந்தார்.
ரஷ்யர்களால் ஒரு பிரபல நடனக் கலைஞர் பலியாகியுள்ளது, ரஷ்ய சமூகத்திற்கே அவமானம் என குறிப்பிட்டுள்ள அவர், குறித்த தகவல் தாங்க முடியாத வலியை தருவதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய பின்னர் நூறுக்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட பல நூறு அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.