லூசிபரைத் தொடர்ந்து மீண்டும் மலையாள ரீமேக்கில் சிரஞ்சீவி
மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் சிரஞ்சீவி. காட்பாதர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் வெளியான மற்றொரு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. மோகன்லால் மற்றும் பிருதிவிராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ப்ரோ டாடி என்ற மலையாள நகைச்சுவை படத்தை பார்த்த சிரஞ்சீவியை அப்படம் வெகுவாக கவர்ந்து விட்டதாம். அதையடுத்து இதுபோன்ற ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை என்று கூறிய சிரஞ்சீவி, விரைவில் இந்த ப்ரோ டாடி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.