டாக்கா: வங்க தேசத்தில் ‘இஸ்கான்’ அமைப்புக்கு சொந்தமான கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சிலைகளை சேதப்படுத்தியதோடு பக்தர்களையும் தாக்கியது. காயம் அடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா நகரில் இஸ்கான் அமைப்பின் கிருஷ்ணர் கோயில் உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நேற்று இங்கு ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.அப்போது ஹாஜி சைபுல்லா என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கோயிலுக்குள் புகுந்தனர். கோஷமிட்டவாறு வந்த அந்த கும்பல் சிலைகளை உடைத்து பக்தர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது.
இதில் மூன்று பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸ் வந்ததும் அந்தக் கும்பல் தப்பி ஓடியது. காயம் அடைந்த பக்தர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வங்க தேசத்தில் கடந்த சில வருடங்களாக ஹிந்து கோயில்கள் உட்பட சிறுபான்மையின வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது.
Advertisement