வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!

Xiaomi
நிறுவனத்தின் பிராண்டான Redmi அதன் ரெட்மி கே 50 தொடர் ஸ்மார்ட்போன்களுடன்
Redmi Max
எனும் 100″ அங்குல அளவு கொண்ட Ultra-HD LED TV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் தற்போது இந்த டிவியை சீனாவில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியானது 100″ அங்குல 4K திரையை 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டதாக உள்ளது.
ரெட்மி மேக்ஸ் 100
இன்ச் ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் மற்றும் HDR10+ தரத்தை ஆதரிக்கிறது.

சிறப்பான கேமிங் திறனுக்காக, இந்த ஸ்மார்ட் டிவியில் HDMI ஆதரவு இணைப்புடன் Virtual ரெப்ரெஷ் ரேட் (VRR) மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவி டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவுடன் 30 வாட் ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

நம்பமுடியாத விலையில் Redmi போன் அறிமுகம் – வெறும் ரூ.9999-க்கு Snapdragon ஸ்மார்ட்போன்!

Redmi Max 100 இன்ச் டிவியின் விலை

ரெட்மி மேக்ஸ் 100 இன்ச் டிவியின் விலை சீனாவில் 19,990 யுவானுக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,39,500 ஆக இருக்கிறது. இந்த டிவி கருப்பு நிறத்தில் வருகிறது. Redmi Max 100 இன்ச் டிவியின் முன்பதிவை சியோமி நிறுவனம் தனது இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

இது ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பிற சந்தைகளில் டிவி எப்போது வெளியிடப்படும் என்பதை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. Xiaomi கடந்த ஆண்டு Redmi Max 86 இன்ச் டிவியை 7,999 யுவான் (சுமார் ரூ. 95,700) விலையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

108MP கேமரா; AMOLED டாட் டிஸ்ப்ளே; 5G இணைப்பு – Redmi போன் இருக்க வேற என்ன வேணும்!

Redmi Max 100 இன்ச் டிவியின் சிறப்பம்சங்கள்

Redmi Max 100-இன்ச் ஸ்மார்ட் டிவி 3840×2160 பிக்சல் Resolution உடன் கூடிய 4K ஐபிஎஸ் பேனலைக் கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் Peak Brightness ஆகிய அம்சங்களுடன் வருகிறது. கூடுதலாக, ரெட்மியின் பெரிய ஸ்மார்ட் டிவி Dolby Vision, IMAX மற்றும் HDR ஆதரவைப் பெறுகிறது.

இந்த ஸ்மார்ட் டிவியானது 178 டிகிரி Viewing Angle-ஐ பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. மேலும், கேமிங் கன்சோலுடன் அதிவேகமாக டேட்டாவை பகிரும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இதற்காக Virtual Refresh Rate, Auto Low Latency Mode ஆகிய அம்சங்கள் உள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் மெமரி வசதியும் உள்ளது.

ஒலித் திறன் மேம்பாட்டிற்காக Dolby Digital Plus,
Dolby Atmos
ஆதரவுடன் 30 வாட் ஸ்பீக்கர்களை இந்த பெரிய ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது. இணைப்பிற்காக, Wi-Fi 6, 3 HDMI போர்ட்கள் (ஒரு HDMI 2.1 போர்ட்), இரண்டு USB போர்ட்கள் மற்றும் ஒரு Ethernet போர்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த டிவி ஆண்ட்ராய்டு இயங்குதள அடிப்படையிலான
MIUI
டிவி ஸ்கின் உதவியுடன் இயங்குகிறது.

Read more:
உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவம்!இனி நீங்க ஏமாத்த முடியாது – Netflix எடுத்த அதிரடி முடிவு!இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய ‘Rossgram’ ஆப்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.