வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர் செல்வம் வாசுத்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ஓதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும் எனவும் வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.