வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்

உழவுத் தொழிலே உன்னதம் என உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்துள்ளனர் நம் ஆதித் தமிழர்கள்

வேளாண்மை உச்சநிலைக்குச் செல்ல இந்த வேளாண் பட்ஜெட் உதவும் – அமைச்சர்

86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணை

வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது

குறுவை சாகுபடியில் வரலாற்று சாதனை.!

தமிழ்நாட்டில், இதுவரை இல்லாத வகையில், குறுவை சாகுபடி 4 லட்சம் 96 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்றது

53.56 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி.!

நெல் சாகுபடி மொத்த அளவு 53.56 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது – அமைச்சர்

3.35 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம்

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 3.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.154 கோடி இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது

டெல்டாவில் தடையின்றி நீர்ப்பாசனம்.!

டெல்டாவில் 3.16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி

விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், 59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண குழு

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது

சிறு தானியங்கள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை

29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும்

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படும் – வேளாண்துறை அமைச்சர்

காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் – அமைச்சர்

இளையோர் வேளாண் தொழில் தொடங்க நிதியுதவி

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும்

முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி

ரூ.300 கோடியில் இலவச தென்னங்கன்று திட்டம்

கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

ரூ.132 கோடியில் மானாவாரி நிலத்தொகுப்பு

132 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சரின் நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், மானாவாரி நிலத்தொகுப்பு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.400 கோடி வழங்கப்படும்

இயற்கை உரங்கள் தயாரிக்க குழுக்கள் அமைப்பு

இயற்கை விவசாயத்திற்கான இயற்கை உரங்கள் தயாரிக்க 100 குழுக்கள் உருவாக்கப்படும்

இயற்கை உரங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு குழுவிற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்

மண்புழு உள்ளிட்ட இயற்கை உரங்களை தயாரிக்க குழுக்கள் அமைப்பு – தலா ரூ.1 லட்சம் நிதி

பயிர்க்காப்பீடு திட்டம் – ரூ.2339 கோடி ஒதுக்கீடு

தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு

அறுவடைக்கு பின் நெல் சாகுபடிக்கு நிதி

அறுவடைக்கு பின் நடைபெறும் நெல் சாகுபடிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும்

ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு

15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கருவிகள் தொகுப்பு வழங்கப்படும்

வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதி

வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வீதம் நிதி

முதற்கட்டமாக 200 வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மரம் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கல்

சந்தனம், தேக்கு உள்ளிட்ட உயர்ரக மரங்கன்றுகள் வழங்கப்படும்

சேலத்தில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் ஏற்படுத்தப்படும்

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.15 கோடி

தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு

இயற்கை முறை பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும்

சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிப்பு.!

சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்

சூரியகாந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.28 கோடி ஒதுக்கீடு

வேளாண்மைக்கான பிரத்யேக செயலி அறிமுகம்.!

வேளாண்துறையில், விதை முதல் உற்பத்தி வரை, அனைத்தையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் வகையில் பிரத்யேக செயலி

“தமிழ் மண் வளம்” என்ற புதிய இணையதளம்

தமிழக விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள மண்ணின் வளம், தன்மை குறித்து அறிந்து கொள்ள புதிய ஏற்பாடு

கோவை வேளாண் பல்கலை.யுடன் இணைந்து “தமிழ் மண் வளம்” என்ற புதிய இணைய முகப்பு உருவாக்கப்படும்

மாவட்ட அளவில் “சிறுதானிய திருவிழா”

மாவட்டங்கள் அளவிலும், மாநில அளவிலும், முதலமைச்சர் தலைமையில், “சிறுதானிய திருவிழா” நடைபெறும்

கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை

வேளாண் ஒழுங்குமுறை விரிவாக்க மையங்களில், கிரெடிட் கார்டுகள் மூலம், பணப்பரிவர்த்தனைக்கு ஏற்பாடு

டிரோன் பூச்சி மருந்து தெளிப்புக்கு பயிற்சி

டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை, விவசாயிகள் அனைவரும் அறியும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.195 வழங்கப்படும்

கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், திசு கரும்பு நாற்று வளர்ப்பு உள்ளிட்டவை ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்

7500 ஏக்கரில் இயற்கை விவசாயத்திற்கு பயிற்சி

மேலும் 7500 ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயம் செய்யும் வகையில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்

கரும்புகளை எடைபோட நவீன எடை மையங்கள்

கொள்முதல் செய்யப்படும் கரும்புகளை எடைபோட நவீன எடை மையங்கள் அமைக்கப்படும்

சேலம், திருவள்ளூரில் சோயா பீன்ஸ் சாகுபடி.!

சேலம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை

மயிலாடுதுறை சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை

மயிலாடுதுறையில் இயங்காமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை

20 ஆயிரம் ஏக்கரில் மாற்றுப்பயிர் திட்டம்

மாற்றுப்பயிர் திட்டத்தை 20 ஆயிரம் ஏக்கரில் செயல்படுத்தும் வகையில், ரூ.16 கோடி ஒதுக்கீடு

காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப் பயிர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை

3 புதிய மொத்த காய்கறி விற்பனை வளாகம்

கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரியில், தனியார் பங்களிப்புடன் புதிய காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும்

38 ஆயிரம் ஏக்கரில் ஊடுபயிர் சாகுபடி.!

38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஊடுபயிர் சாகுபடி திட்டத்திற்கு ரூ.27.51 கோடி ஒதுக்கீடு

தென்னை, மா, வாழை உள்ளிட்டவற்றின் சாகுபடிக்கு இடையே ஊடுபயிர்கள் சாகுபடி ஊக்குவிக்கப்படும்

தேனி வளர்ப்பு திட்டத்திற்கு சிறப்பு நிதி.!

தேனி வளர்ப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு, வேளாண் பட்ஜெட்டில் ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு

பண்ணை இயந்திரமயமாக்கல் ஊக்குவிப்பு

பண்ணை சாகுபடி முறையில் இயந்திரமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

10 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.!

10 இடங்களில், புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

50 உழவர் சந்தைகள் சீரமைக்கப்படும்.!

50 இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி நிதி

தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை.!

காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

இயற்கை முறை தோட்டக்கலை சாகுபடி.!

தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க – ரூ.30 கோடி ஒதுக்கீடு

10 லட்சம் பனை விதைகள் விநியோகம்

தமிழ்நாடு மாநில மரமான பனைமரங்களை பாதுகாக்க நடவடிக்கை

10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படும்

மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்களை வாங்க 75% மானியம் – ரூ.2 கோடி ஒதுக்கீடு

கருப்பட்டி உற்பத்திக்கு சிறப்பு மானியம்.!

கருப்பட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு சிறப்பு மானியம்

பூண்டு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை.!

கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில், 1,250 ஏக்கரில் பூண்டு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை

கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில், பூண்டு சாகுபடிக்கு, ஏக்கருக்கு ரூ.8,000 வழங்கப்படும்

முருங்கை சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை.!

முருங்கை ஏற்றுமதி உள்ளிட்ட தேவைகள் ஊக்குவிக்க, அதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை

அரசு மாணவர் விடுதிகளில் மூலிகைத் தோட்டம்

தமிழ்நாடு அரசின், மாணவ, மாணவியருக்கான 10 ஆயிரம் விடுதிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்க நடவடிக்கை

ரூ.381 கோடியில் 3 உணவு பூங்காக்கள்.!

திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் உணவு பூங்காக்கள் அமைக்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு

பனை மரம் ஏறும் சிறந்த கருவிக்கு விருது.!

பனை மரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும்

உள்ளூர் மீன் வளர்ப்புக்கு ரூ.5 கோடி

அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசி போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

ரூ.604.73 கோடியில் 2,750 கி.மீ அளவு சாலைகள்.!

விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்

2 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்.!

சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களை உள்ளட்டக்கியதாக ஒரு சிறுதானிய மண்டலம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.