அஜித்தின் ’வலிமை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித்தின் ‘வலிமை’ கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ’வலிமை’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாமல், தியேட்டருக்கு செல்ல முடியாதவர்களும் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் முடியவுள்ளதால் ‘வலிமை’ வரும் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை, உறுதிப்படுத்தும் விதமாக மார்ச் 20 ஆம் தேதி ஜீ5 தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக ப்ளாக்பஸ்டர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என்று அறிவித்திருக்கிறது. ‘வலிமை’ ரிலீஸ் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி அறிவித்தால், ‘வலிமை’ பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ‘வலிமை’ படத்தை 50 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒப்பந்தம் போட்டுள்ளதால், 50 நாட்கள் கடந்து வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி ‘வலிமை’ வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.