21, 22, 23 ஆகிய 3 நாட்களில் திருப்பதி தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசனம் செய்ய, வரும் 21,22,23 ஆகிய 3 நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். கரோனா தொற்று குறைந்ததால், மீண்டும் பக்தர்கள் அதிகளவில் திருமலைக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

பழையபடி பக்தர்கள் கூட்டம்

2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் பங்கேற்பை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் மீண்டும் தேவஸ்தானம் தொடங்க உள்ளது. சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் தற்போது நேரடியாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் திருமலையில் பழைய படி பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

விரைவில் கோடை விடுமுறை வரவிருப்பதால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங் களுக்கு வரும் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் ஆன்லைனில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

சர்வ தரிசன டோக்கன்கள் தினமும் 30 ஆயிரம் வீதம் திருப்பதியில் நேரடியாக வழங்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.