5 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி: பாவனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

மலையாளம், தமிழ், கன்னடம் என பலமொழி சினிமாக்களில் பிஸியாக நடித்துவந்தவர் கேரள நடிகை
பாவனா
. இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ஆதம் ஜாண் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். மீடியாக்களிடமும் வெளிப்படையாக பேசாமல் இருந்தார்.

இந்நிலையில், உலக மகளிர் தினத்தில் `வி த வுமன் ஆஃப் ஆசியா’ கூட்டமைப்பு நடத்திய `குளோபல் டெளன்ஹால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனம் திறந்து பேசினார் பாவனா. சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாய்ப்புக்களை வேண்டாம் என மறுத்ததாகவும் கூறியிருந்தார்.

அதன்பிறகு மீடியாக்களிடம் சகஜமாக பேசத்தொடங்கிய பாவனா விரைவில் மலையாள சினிமாவுக்கு திரும்பவும் வருவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதிய மலையாள சினிமா ஒன்றில் பாவனா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘
என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு
‘ என்ற பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பாவனா.

உன் மாமானார்தான் இதுக்கெல்லாம் காரணம்: தனுஷிடம் ஒரே போடாக போட்ட இளையராஜா..!

இந்த சினிமா டைட்டில் போஸ்டரை நடிகர்
மம்முட்டி
தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பாவனாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டு தனது ரீஎன்ட்ரியை உறுதிசெய்தார்.
ஆதில் மைமுனத் அஷ்ரப்
இயக்கும் இதன் படபிடிப்பு வரும் மே மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதல் கதையை மையமாகக்கொண்ட உருவாகவுள்ள இந்தப்படத்தில் பாவனாவுக்கு ஜோடியாக
ஷரபுதீன்
நடிக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை பாவனானுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.