சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் . இவர் அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கதிரேசன் அந்த சிறுமியை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் புதர் பகுதிக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கதிரேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.