இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 3 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஜப்பான் முதலீடு செய்யும் என அந்நாட்டின் பிரதமர் பூமியோ கிசிடா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய – ஜப்பானிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பான் பிரதமர் சந்தித்துப் பேசினார். அதன்பின் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
2014ஆம் ஆண்டு அறிவித்தபடி இந்தியாவில் ஜப்பான் முதலீடு இரண்டரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சாரக் காருக்கான பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 3 இலட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா தெரிவித்தார்.