அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் அனைத்து விடைத்தாள்களும் திருத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கி மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றன.
தேர்வின் பொழுது, வழங்கப்பட்ட நேரத்தையும் தாண்டி விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றிய மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடப்படும் என தகவல் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மிகுந்த கவலைக்குள்ளானர்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.