தென் அமெரிக்க நாடு முழுவதும் தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் பரவி வருவதால் இதை உடனடியாக தடுக்கும்படி பிரேசிலின் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் (Alexandre de Moraes) என்பவர் டெலிகிராம் செயலிக்கு உத்தரவிட்டுள்ளார். இதைப் பற்றி டெலிகிராம் தரப்பில் பதில் ஏதும் வராத நிலையில் ‘பிரேசில் நாட்டின் சட்டத்திற்கு டெலிகிராம் அவமரியாதை செய்தது மற்றும் எண்ணற்ற நீதிமன்ற தீர்ப்புகளுக்கு இணங்குவதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைத்துள்ளது. இதுசட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் பொருந்தாது’ என்றும் ‘காவல்துறை, உயர் தேர்தல் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளுக்கு டெலிகிராம் நிறுவனம் பலமுறை இணங்க மறுத்துவிட்ட காரணத்தால் டெலிகிராம் செயலிக்கு பிரேசில் தடை விதித்ததாக நீதிபதி மோரேஸ் கூறியுள்ளார். மேலும் இது பற்றிக் கூறிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (jair Bolsonaro), ‘ உண்மையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அதை வரவேற்கிறோம்’ என்று கூறினார்.
டெலிகிராம் தடை குறித்து பதிலளித்த டெலிகிராம் சிஇஓ. பாவெல் துரோவ், நீதிமன்றத்திடமிருந்து வந்த இ-மெயில் உண்மையானதா இல்லை போலியாக வந்ததா என உறுதிசெய்ய வேண்டியிருந்தது. பின்னர் இதற்கு பதிலளிக்கத் திட்டமிட்டோம் ஆனால் அதற்குள் நீதிமன்றம் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்தது என்று கூறினார். மேலும் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இதில் அரசில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.