தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளைக் காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், நாளை மாலை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி கார் நிக்கோபாருக்கு வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும், போர்ட் பிளேருக்குத் தென்மேற்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது.
இது வடக்கு நோக்கி மேலும் நகர்ந்து வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், அதையடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும் உருவெடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.