அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மார்ச் 20-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஆசானி புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து மார்ச் 22 அன்று வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடற்கரையை அடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.