மாண்டியா, : ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம், எப்போதோ வந்திருக்க வேண்டும். இப்போது வந்திருப்பது டிரெய்லர் மட்டுமே. 5 சதவீத்தை காண்பித்துள்ளனர். இன்னும் 95 சதவீதம் பாக்கியுள்ளது,” என உயர் கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.மாண்டியா கே.ஆர்.பேட்டில், அவர் நேற்று கூறியதாவது:’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் வெறும் டிரெய்லர் மட்டுமே. இதை பார்த்தே காங்கிரசார் வெலவெலத்துள்ளனர்.
வரும் நாட்களில், தொடர்ந்து படங்கள் வெளியாகும். காஷ்மீரில் இந்துக்கள் எந்த அளவுக்கு அநியாயத்துக்கு ஆளாகினர் என்பதை பற்றி, உதாரணமாக காண்பித்துள்ளனர்.மேலும் முக்கியமான பகுதிகளை பார்க்க வேண்டியுள்ளது. இந்துக்கள் கொல்லப்பட்டும் கூட, காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.பாடத்திட்டங்களில், பகவத் கீதையை சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை. நம் கலாச்சாரம், சம்பிரதாயங்களை நமது குழந்தைகள், கல்வி வழியாக கற்க வேண்டும். இது தொடர்பாக, பள்ளி நிர்வாகங்கள், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும்.காங்கிரசார் அனைத்தையும் எதிர்ப்பர். கொரோனா தடுப்பூசி பெறுவதற்கும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
தடுப்பூசி பெற வேண்டாம் என பிரசாரம் செய்தார். அவர்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.நம் நாட்டு மக்களின் உணர்வு, கலாச்சாரத்தை எதிர்த்த காங்கிரசின் நிலை, என்னாவானது பாருங்கள். நாடு முழுவதும் புறக்கணிக்கப்படுகின்றனர்.சட்டசபை முடிந்த பின், அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம். கட்சி மேலிடத்துடன், முதல்வர் கலந்தாலோசித்து முடிவு செய்வார்.துமகூரில் பஸ் விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தது மிகவும் துயரமான விஷயம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்குவது பற்றி அரசு முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement