படையெடுப்பை நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
அமைதிக்கான நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் பல தலைமுறைகளுக்கு ரஷ்யா பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு இன்று 25 நாட்களை எட்டியுள்ளது.
ஆனால் ரஷ்யா முன்பு மண்டியிடமாட்டோம் என்று உறுதியுடன் உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் பெரும் படைகளுடன் யுத்தக்களத்தில் நிற்கின்றனர். இப் போரில் ரஷ்யாவுக்கு எதிர்பாராத பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கிவ் வைக் கைப்பற்ற வந்த படைகள் முன்னேற முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இது போருக்கான நேரம் அல்ல பேச்சுவார்த்தைக்கான நேரம் என்று ஜெலன்ஸ்கி புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்