அழிந்து வரும் பறவை இனங்களை காக்கும் நரிக்குறவர்கள்.. சிலிர்க்க வைத்த இளைஞர்களின் முயற்சி!

பறவைகளை வேட்டையாடி வாழ்க்கை ஆதாரத்தை மேற்கொண்டு வந்த நரிக்குறவர் சமூக மக்ககளுக்கு, பறவைகளை பாதுகாக்கும் பணியை கொடுத்து அவர்களது வாழ்வியல் முறையை மாற்றி அமைததிருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க புதுச்சேரி முழுவதும் ஆயிரக்கணக்கான கூடுகளை தயாரித்து அமைத்து வரும் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நரிக்குறவர்களை அணுகி பறவைகளை பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்து கூடு தயாரிக்கும் வேலையை தருகிறார்கள்.
image
அழியும் நிலையில் உள்ள புள்ளி ஆந்தை, கூகை ஆந்தை, மரம்கொத்திப றவை, மைனா, சிட்டுக்குருவி உள்ளிட்ட பல்லுயிர் இனங்களை காக்க பலவிதமான கூடுகளை நரிக்குறவர்கள் தயாரிக்கிறார்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களும் இவர்கள் தயாரித்த கூடுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
image
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அழிந்து வரும் சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்க பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களால் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கூடுகளில் சிட்டுக் குருவிகளும், பறவைகளும் முட்டையிட்டு குஞ்சு பொரித்து தனது இனத்தை விருத்தி செய்து வருவது மகிழ்ச்சிக்குரிய விசயமே.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.