இது என்ன ஜாலியோ ஜிம்கானாக்கு வந்த சோதனை.. வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

விஜய்
நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள படம்
பீஸ்ட்
. இப்படத்தை
நெல்சன்
இயக்க சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. மேலும்
பூஜா ஹெக்டே
,
செல்வராகவன்
ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கும்
அனிருத்
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இளம் இயக்குனர் நெல்சன் உடன் விஜய் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. காரணம் கமர்ஷியல் சினிமாவில் இருந்து சற்று வித்யாசமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர் நெல்சன். மேலும் இவருடன் கமர்ஷியல் சினிமாவிற்கு பெயர்போன விஜய் இணைந்ததால் இப்படம் எப்படி இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் அதிகளவில் இருந்து வருகின்றது.

விஜய் நடிகராவதில் எனக்கு இஷ்டமில்லை..அதனால் தான் அப்படி செய்தேன் : எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்பெல்லாம் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இடைவிடாத இறுதிக்கட்ட பணிகள் இருப்பதால் படக்குழு ஆடியோ வெளியிட்டு விழாவை ரத்து செய்தது. இது விஜய் ரசிகர்களை சற்று ஏமாற்றமடைய செய்துள்ளது.

விஜய்

இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு படக்குழு இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். அதாவது இப்படத்தில் விஜய் பாடிய பாடல் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.

அதன் படி ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் நேற்று வெளியானது. வழக்கம் போல விஜய்யின் பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு இப்பாடலுக்கு கிடைத்துள்ளது. கடந்த மாதம் அரபிக் குத்து பாடல் பெற்ற வரவேற்பை போலவே இப்பாடலும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட்

இந்நிலையில் இப்பாடல் வெளியான ஐந்து நிமிடங்களிலேயே மூன்று லட்சம் பார்வையாளர்களை பெற்றது. மேலும் பாடல் வெளியான பத்து நிமிடத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை பெற்றது. ஆனால் கடந்த மாதம் வெளியான அரபிக் குத்து பாடல் வெளியான பத்து நிமிடத்தில் எட்டு லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பெற்றது.

இந்நிலையில் விஜய் பாடிய பாடல் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற பாடல் யூடியூபில் சாதனை செய்ய தவறியது அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சால்ட் & பெப்பர் தாடியும், காதில் கடுக்கனும்’ அஜித்தின் நியூ லுக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.