ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் கண்டது. இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது இன்னும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஜூம் காலில் பணி நீக்கம்.. பெட்டர்.காமை போல பி&ஓ ஃபெரிஸ்.. ஊழியர்கள் கண்ணீர்..!
எண்ணெய் வணிகத்தில் பாதிப்பு
இதற்கிடையில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளுக்கு மத்தியில், அண்டை நாடுகள் பலவும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியினை தடை செய்துள்ளன. இது ரஷ்யாவின் மிக முக்கிய வணிகமாக இருந்து வரும் எண்ணெய் வணிகத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி
இதற்கிடையில் தங்களது எண்ணெய் வணிகத்தினை மேன்மைபடுத்த, ரஷ்யா இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நல்ல வாய்ப்பினை இந்தியாவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானும் ஆர்வம்
ரஷ்யாவினை போல ஈரானும் எண்ணெய் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றது. இது இந்தியா – ரியாலில் வணிகம் செய்யப்படுவதால், இநதியாவுக்கு பலன் கிடைத்து வந்தது. ஆனால் அமெரிக்க தடையின் காரணமாக இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியாமல் போனது. இந்த நிலையில் இந்தியாவுடன் எண்ணெய் வணிகம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இருமுனை போட்டி
இந்த இருமுனை போட்டிகளையும் இந்தியா வரவேற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து வந்த நிலையில் சலுகை விலையில் கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி
ரஷ்யா மார்ச் மாதத்தில் இதுவரை ஒவ்வொரு நஆளும் 3,60,000 பேரல்கள் எண்ணெயினை இறக்குமதி செய்துள்ளது. இது 2021ம் ஆண்டில் இறக்குமதி செய்த சராசரியை விட 4 மடங்கு அதிகமாகும்.
இது தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வரவேற்பு
இந்த நெருக்கடியான நிலையில் இந்த அனைத்து தரப்பில் இருந்தும் இறக்குமதி செய்ய ஆராய்ந்து வருவதாகவும், இது செலவினத்தை குறைக்க வழிவகுக்கலாம் என்ற நிலையில், இதுபோன்ற சலுகைகளை வரவேற்பதாகவும் இது குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
India plans to import crude oil from Russia and Iran
India plans to import crude oil from Russia and Iran/இந்தியாவின் அதிரடி திட்டம்.. ரஷ்யா, ஈரானுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு.. !